கன்னியாகுமரி அருகே 3 கடைகளில் தீ விபத்து
கன்னியாகுமரி அருகே ஓட்டல் உள்பட 3 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே பழத்தோட்டம், பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது65). இவர் ஒற்றைப்புளி சந்திப்பில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே தர்மராஜ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலையில் சுப்பையா கடைக்கு சென்றபோது, கடையின் பின் பகுதியில் இருந்து புகை மூட்டம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அங்கு சென்று பார்த்த போது கடையின் பின்னால், ஓட்டலையொட்டியுள்ள பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனே, சுப்பையா தீயை அணைக்க முயன்றார்.
ஆனால், காற்று பலமாக வீசியதால் தீ மள.. மள..வென எரிந்து பர்னிச்சர் கடை, ஓட்டல் மீது பரவியது. மேலும், அருகில் இருந்த ஒர்க்ஷாப் மீதும் பரவியது.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் ஓட்டல் உள்பட 3 கடைகளில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட்டல் நடத்தி வந்த தர்மராஜ், கன்னியாகுமரி நகர அ.தி.மு.க. துணை செயலாளர் ஆவார்.