கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் 106 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.
புதுக்கோட்டை,
ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் ரூ.2 ஆயிரத்து 720-ம், துப்புரவுப் பணியாளர்கள் ரூ.4 ஆயிரத்து 560 மட்டுமே ஊதியமாகப் பெற்று வருகின்றனர். இத்தகைய குறைந்த ஊதியத்தை கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது என்பதால் அரசு ஆணைப்படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 618-ம், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 234-ம் குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும்.
பணிக்கொடை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று காலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு (சி.ஐ.டி.யு.) மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முகமதலிஜின்னா, துணை செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கோகர்ணம் போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 106 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.