சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருமானூர் அருகே பெரியமறை சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பெரியமறையில் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3-ந் தேதி காலை திருமஞ்சனத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் பெருமாள் தேவியாருடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
தேரோட்டம்
தொடர்ந்து நேற்று காலை சீனிவாச பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருள செய்தனர். பின்னர் பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை காண்பித்து பெருமாளை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இன்று (புதன்கிழமை) ஏக தின லட்சார்ச்சனை காலை முதல் மதியம் வரை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பட்டாச்சாரியார்கள் சங்க தலைவர் ஸ்ரீசார நாராயண பட்டாச்சாரியார், கோவில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் செய் திருந்தனர்.