புதிய அடுக்குமாடி வீடுகள் கட்ட அனுமதிக்காததை கண்டித்து பாரதி பூங்காவில் குடியேறும் போராட்டம்
பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடி வீடுகள் கட்ட கவர்னர் அனுமதிக்காததை கண்டித்து கவர்னர் மாளிகை எதிரே பாரதி பூங்காவில் குடியேறும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை குமரகுருபள்ளத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 224 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் இடிந்துவிழும் நிலையில் மோசமாக உள்ளன.
இதுதொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவரும் அந்த இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார். இதற்காக அதிகாரிகளும் அந்த குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையொட்டி புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரின் ஒப்புதலோடு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதுகுறித்த தகவல் தெரியவந்ததை தொடர்ந்து குமர குருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று கவர்னர் மாளிகை முன்பு கூடினார்கள்.
அவர்கள் கவர்னர் மாளிகை எதிரே பாரதி பூங்காவுக்குள் சென்று பூங்காவில் குடியேறும் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு எதிரே பாரதி பூங்காவில் உள்ள நுழைவுவாயில் கதவு பூட்டு போட்டு மூடப்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் பிரச்சினை தொடர்பாக கவர்னரிடம் பேசலாம் என்று கூறி லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுடன் தொடர்ந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ.வும் அங்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த போராட்டம் தொடர்பாக லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது.
குமரகுருபள்ளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் வசிக்க முடியாத சூழல் உள்ளது. எப்போது குடியிருப்பு இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே பொதுமக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்ட கோப்புகள் தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தற்போதுள்ள நிலையில் அங்கு வசிக்க முடியாது என்பதால் பாரதி பூங்காவில் குடியேறும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரகுருபள்ளத்தில் உள்ள 224 குடியிருப்புகளை இடிப்பது தொடர்பான கோப்புகள் கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்தது. அதனை கவனமாக பரிசீலித்த கவர்னர், அதுகுறித்து முடிவெடுக்க சில விளக்கங்களை கேட்டார். அதாவது, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நிதித்துறை நிதி தர இசைவு தெரிவித்துள்ளதா? பணிகள் எப்போது முடிவடையும்? அதுவரை அங்கு குடியிருப்பவர்கள் தங்குவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து பதில் தருமாறு 8.11.2017 அன்று முதல்-அமைச்சருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக 15.11.2017 அன்று நினைவூட்டும் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் பதில் வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவர்னர் அழைப்பின்பேரில் நேற்று மாலை லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். அப்போது கவர்னர் கிரண்பெடி அவரிடம், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை இடித்து விட்டு புதுவீடுகள் கட்டுவது தொடர்பான கோப்புகள் தற்போது தன்னிடம் இல்லை. அந்த கோப்பு கவர்னர் மாளிகையில் இருந்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன். குமரகுரு பள்ளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை ஆய்வு செய்து வல்லுனர்கள் சான்றிதழ் வழங்கி உள்ளனர். அதில், கட்டிடங்களை மீண்டும் சீர் செய்து பயன்படுத்தலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர் என்றார்.
உடனே லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கவர்னரிடம் அந்த கட்டிடத்தை பயன்படுத்தவே முடியாது. எப்போது குடியிருப்பு இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். அப்போது அவர், அந்த கட்டிடத்தை மீண்டும் ஒரு முறை வல்லுனர்கள் ஆய்வு செய்து அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அதனை இடிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாக கூறினார்.
இந்த சந்திப்பின் போது குமரகுருபள்ளத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் உடனிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.