இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தக்கோரி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
கோத்தகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. உடனடியாக விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (25). இவர்களுடைய மகன் ஸ்ரீதர் (2). நேற்று முன்தினம் மாலை தீபா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது தீபா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து தீபாவை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தீபாவின் அண்ணன் தினேஷ் குமார் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தீபாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் தீபாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். மேலும் தீபாவின் சாவிற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் வெளியூரில் வசிப்பதால் தீபாவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ. உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் ஆர்.டி.ஓ. பத்ரிநாத், கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, தீபாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற வந்தார். அப்போது தீபாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து தீபாவின் உடல் அடக்கம் செய்து விட்டு உறவினர்கள் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. அலுவலகம் வருவார்கள். அவர்களது கோரிக்கை படி விசாரணையை இன்றே நடத்துமாறு குன்னூர் ஆர்.டி.ஓ.விடம் கேட்டுக் கொண்டார். இதற்கு ஆர்.டி.ஓ. சம்மதம் தெரிவித்ததால் தீபாவின் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு பின் தீபாவின் உடலை பெற்று கொண்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.