மணல் கடத்தல்; 4 பேர் கைது

காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு புகார்கள் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்தார். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.

Update: 2018-04-11 00:02 GMT
காஞ்சீபுரம்,

அதையொட்டி குரங்கணிமாட்டம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 48), திருவண்ணாமலை மாவட்டம் தூசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (64), சக்திவேல் (36) ஆகியோரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

உத்திரமேரூரை அடுத்த மருதம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் உத்திரமேரூர்-காஞ்சீபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களில் ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை பிடித்து விசாரித்ததில் அவர் உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (26) என்பது தெரியவந்தது.

அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 2 மோட்டார் சைக்களில் பின்புறம் மூட்டையில் மணல் இருந்தது தெரியவந்தது. உடனே ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்