டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறிப்பு

டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-04-11 00:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் லிங்கபாளையம் தெருவில் வசிப்பவர் கருணாகரன் (வயது 44). இவர் காஞ்சீபுரம் அருகே வெள்ளைகேட் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இந்த கடையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த சரவணன் (38) என்பவரும் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை மூடிவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கருணாகரன் ஓட்டிவந்தார்.

காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை வளைவில் திரும்பும்போது திடீரென 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர்.

அப்போது அந்த கும்பல் டாஸ்மாக் விற்பனை பணத்தை எடு என்று கத்தியால் மிரட்டினர். அதற்கு அவர்கள் அந்த பணத்தை எடுத்து வரவில்லை. எங்களிடம் பணம் இல்லை என்று கூறினார். உடனே அந்த கும்பலை சேர்ந்த சிலர் டாஸ்மாக் விற்பனையாளர் கருணாகரன் தலையில் கத்தியால் வெட்டினர். பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பிச்சென்று விட்டது.

காயம் அடைந்த கருணாகரண் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வரு கிறார்.

மேலும் செய்திகள்