‘கிரிக்கெட் போட்டிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல’ - அய்யாக்கண்ணு
‘கிரிக்கெட் போட்டிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல’ என்று தாராபுரத்தில், கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசினார்.
தாராபுரம்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எ.காளிமுத்து தலைமை தாங்கினார். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு, காவிரி, வைகை, குண்டலாறு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மிசா மாரிமுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் கே.எ.சுப்பிரமணியம், நிர்வாகக் குழு உறுப்பினர் வி.சிவக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது பி.அய்யாக்கண்ணு பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் காவிரி டெல்டா பகுதிகள் வீணாகிவிடும். காவிரி டெல்டா பகுதி வீணாகி விட்டால் அந்த பகுதியில் உள்ள நிலங்களை விவசாயிகள் விற்றுவிட்டு, இடம் பெயர்ந்து விடுவார்கள். அதன் பிறகு அந்த நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் விலைக்கு வாங்கி விடுவார்கள். கார்ப்பரேட் கம்பெனிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளை தமிழர்களுக்கு சாப்பிட கொடுக்கும். இதனால் ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடும். பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிடும் நிலை உருவாகும்.
இந்த நிலை தமிழகத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்திற்காக மட்டுமல்ல இந்த உண்ணாவிரதப் போராட்டம். எதிர்காலத்தில் தமிழகத்தில் இளைஞர்களையும், இளம் பெண்களையும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த போராட்டம். உச்சநீதிமன்ற உத்தரவை இதுவரை இருந்த பிரதமர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி வேண்டுமென்றே நிறைவேற்ற மறுக்கிறார்.
காவிரி மேலாண்மை விஷயத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. கர்நாடகாவில் ஓட்டு வேண்டுமா?, தமிழகத்தில் விவசாயிகளின் உயிர் வேண்டுமா? என்றால் இவர்களுக்கு ஓட்டுதான் வேண்டும் என்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த விதமான நிலையிலும் இந்த ஸ்கீமை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறது.
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் காவிரியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாங்கள் கிரிக்கெட் போட்டிக்கு எதிரானவர்கள் இல்லை. தாராளமாக கிரிக்கெட் போட்டியை நடத்தலாம். விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். தண்ணீருக்காக போராடுகிறார்கள். காவிரி மேலண்மை வாரியம் அமைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய- மாநில அரசுகளுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கருப்பு பேஜ் அணிந்து கொண்டால் கூட போதுமென்றுதான் நினைக்கிறோம். ஆனால் எதுவுமே செய்யாமல் விவசாயிகள் எப்படி கெட்டுப்போனால் நமக்கென்ன என்று இருப்பது வேதனை அளிக்கிறது.
பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்றால் விவசாயிக்கு கடன் தள்ளுபடி செய்துவிட்டால், போதுமான தண்ணீர் கொடுத்துவிட்டால், போதுமான விலை கிடைத்துவிட்டால், விவசாயிகள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். நம்மால் கார்ப்பரேட் கம்பெனிகளை இங்கு கொண்டுவர முடியாது என்று நினைக்கிறார். கார்ப்பரேட் கம்பெனிகள் இங்கு வரவில்லை என்றால் அரசாங்கத்திற்கு வருவாய் கிடையாது என்று நினைக்கிறார். இது தவறு.
தமிழகத்தில் 1 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி எந்த போராட்டங்களையும் நடத்த முன்வருவது இல்லை. விவசாயிகள் சிறை செல்வதை அவமானமாக கருதுகிறார்கள். இந்த கருத்து தேவையற்றது. விவசாயிகள் ஒன்று சேரவேண்டும். போராட்டக்களத்திற்கு வரவேண்டும். தொடர்ந்து நமது உரிமைகளுக்காக போராட வேண்டும். போராடாமல் எதுவும் கிடைக்காது. ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற போராடித்தான் ஆகவேண்டும்.
இவ்வாறு அய்யாக்கண்ணு பேசினார்.