இணையத் தேர்வை தடுமாறாமல் எதிர்கொள்ள...
எல்லாம் கணினிமயமாகிவிட்டதால் வேலைக்கான தேர்வுகளையும் பெரும்பாலான நிறுவனங்கள் கணினி அடிப்படையில் நடத்தத் தொடங்கி விட்டன.
இணையதளம் வழியாக கணினித் தேர்வு நடத்துவதில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிரமங்கள் குறைகிறது. விடைத்தாள் திருத்துவது எளிமையாகிவிடுகிறது. காப்பியடித்தல், வினாத்தாள் வெளியாவது போன்ற பிரச்சினைகள் இல்லை. தேர்வு மையங்கள் இல்லாமல்கூட இணையத் தேர்வுகள் நடக்கின்றன. இந்த இணையத் தேர்வு யுகத்தில் முதல் முறையாக தேர்வை எதிர்கொள்வது கொஞ்சம் தடுமாற்றத்தைத் தரலாம். அப்படி தடுமாறால் இணையத் தேர்வை எதிர்கொள்ள சில டிப்ஸ்...
முதலில் தேர்வுக்கான விதிமுறைகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இணையத்தில் நீங்கள் லாக்இன் செய்யும்போதும் மீண்டும் விதிமுறைகள் காட்டப்படும். அந்த விதிமுறைகளையும் சில நிமிடங்கள் ஒதுக்கி வாசித்துப் பாருங்கள். உடனே அடுத்த பக்கத்திற்கு தாவிச் சென்றுவிடாதீர்கள்.
இணையத் தேர்வில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த பின்பு அடுத்த கேள்வி திரையில் காட்டப்படும் வகையிலும் தேர்வு இருக்கும். அதுபோன்ற தேர்வில் குறித்த நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். அல்லது அடுத்த கேள்விக்குத் தாவிச் செல்ல வேண்டும்.
முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு விடையளித்து நேரத்தை மிச்சம்பிடியுங்கள். யோசித்து பதிலளிக்க வேண்டிய கேள்விக்கும் நேரத்தை செலவிடுங்கள். ஆனால் குழப்பம் தரும் கேள்விகளில் மட்டும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதீர்கள்.
யாரும் கவனிக்கவில்லையென்று காப்பியடிக்கவோ, தேர்வுபக்கத்தை தாண்டி அடுத்த இணையப் பக்கத்திற்கு செல்லவோ முயற்சிக்காதீர்கள். தேர்வு இணையம் அப்படி செல்ல அனுமதிக்காது, அல்லது வெளியேறினால் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இணையத் தேர்வில் ஒரு பக்கம் நேரம் ஓடிக் கொண்டிருக்கும். நேரம் கரைவது எச்சரிக்கையாக காட்டப்படலாம். அதைக் கண்டு பதட்டம் அடைய வேண்டாம். மளமளவென பதிலளிப்பதால் குறித்த நேரத்தில் தேர்வை முடிக்க முடியும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
இணையத்தேர்வின்போது தொடர்ந்து 3 மணி நேரம் வரை கணினித் திரையை பார்க்க நேர்வது பலருக்கு கண்உறுத்தல், தலைசுற்றல் போன்ற பாதிப்புகளைத் தரலாம். எப்போதும் போனும், கையுமாக இணையதளத்தில் வலம் வரும் இன்றைய இளைஞர்களுக்கு இந்த தொந்தரவு தெரிய வாய்ப்பு குறைவுதான். இருந்தாலும் இணையத்தில் உலவாமல் கட்டுப்பாடாக இருப்பவர்கள் இணையத் தேர்வை திடீரென எதிர்கொள்ள நேர்ந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படலாம். இவர்கள்தேர்வுக்குத் தயாராகும் போதே இணையதளத்தில் தகவல்களை தேடுவது, படிப்பது என்று சராசரியாக நேரம் செலவிட்டு வந்தால் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு விடலாம்.
மாதிரி தேர்வுகளை எதிர்கொண்டு பயிற்சி பெறுவது நல்ல பலன்தரும்.