வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்!
பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலிய ஆராய்ச்சி மையம்
இந்திய விஞ்ஞான மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் நிறுவனம் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம். தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். குறிப்பிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக், எம்.இ, எம்.டெக் மற்றும் பிஎச்.டி. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.iip.res.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-5-2018-ந் தேதி கடைசி நாளாகும்.
பண அச்சகம்
இந்திய செக்யூரிட்டி பிரஸ் எனும் பண அச்சகத்தில் ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 35 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்புடன், தட்டச்சு திறன் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2-5-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://ispnasik.spmcil.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
பருத்தி ஆய்வு மையம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிள் கீழ் செயல்படும் துணை நிறுவனம் மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம். நாக்பூரில் செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் ‘யங் புரபெஸனல்’ பணிகளுக்கு 22 பேரை தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது., பி.எஸ்சி, பி.காம்., பி.சி.ஏ., எம்.எஸ்சி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு கோவையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தின் மண்டல மையத்தில் நேரடி நேர்காணல் நடக்கிறது. வரும் 12,13-ந் தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்புள்ளது. இது பற்றிய விரிவான விவரத்தை http://www.cicr.org.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
கப்பல்தளம்
கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் கப்பல்தளத்தில் புராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஐ.டி., இன்ஸ்ட்ருமென்டேசன், கமர்சியல் போன்ற பிரிவில் டிப்ளமோ படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. முதுநிலை வணிகவியல் படித்தவர்களுக்கும் பணி உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 25-4-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய காட்டுயிர் மையம்
இந்திய வைல்டுலைப் இன்ஸ்டிடியூட் எனப்படும் இந்திய காட்டுயிர்கள் ஆய்வு மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ் போன்ற பணியிடங்களுக்கு 23 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வைல்டு லைப் சயின்ஸ, லைப் சயின்ஸஸ், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், பிஸரிஸ், என்விரான்மென்டல் சயின்ஸஸ், சோசியல் சயின்ஸஸ், எக்கனாமிக்ஸ், உயிரியல், வனவியல், வேளாண்மை போன்ற பிரிவுகளில் முதுநிலை படிப்புகள், பிஎச்.டி. முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விரிவான விவரங்களை இணையதளத்தில் படித்துவிட்டு, விண்ணப்பத்தை நிரப்பி பிடிஎப். கோப்பாக levl@wii.gov.in. என்ற மெயில் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். 14-5-2018-ந் தேதி எழுத்துத்தேர்வும், 15-5-18, 16-5-2018-ந் தேதிகளில் நேர்காணலும் நடைபெறும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 30-4-2018-ந் தேதி கடைசி நாளாகும்.
மத்திய ஆய்வு மையம்
தொழுநோய் மற்றும் பாக்டீரிய நுண்ணுயிர் ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் செயல்படுகிறது. தற்போது இந்த மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், களப் பணியாளர், ஆய்வக தொழில்நுட்பனர் போன்ற பணிகளுக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 படித்தவர்கள் மற்றும் லேப்டெக்னீசியன் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்புள்ளது. இது பற்றிய விவரங்களை https://www.jalmaicmr.org.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, தேவையான சான்றுகளுடன் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் 17-4-2018-ந் தேதி கான்பூரில் நடக்கிறது.
ஐ.ஐ.டி. மையத்தில் வேலை
டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், புராெஜக்ட் உதவியாளர், திட்ட உதவியாளர் போன்ற பணிகளுக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு படித்தவர்கள், பணியிடங்கள் உள்ள பிரிவில் பி.எச்டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நேர்காணல் 23-4-2018-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://ird.iitd.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு அவசியமான சான்றுகளுடன், நேர்காணலில் பங்கேற்கலாம்.
தெலுங்கானாவில் 1147 பணிகள்
தெலுங்கானா வித்யா விதனா பரிஷத் எனும் மருத்துவ கல்வி அமைப்பில், சிவில் அசிஸ்டன்ட் சர்ஜன் மற்றும் டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 1147 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில் அசிஸ்டன்ட் பணிக்கு 1133 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட மருத்துவ பிரிவுகளில் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு 4-5-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 13-4-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் இது பற்றிய விவரங்களை https://tvvprecruit.telangana.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.