கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் வி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம்(வயது 25). இவர் எலெக்ட்ரீசியனாக உள்ளார். சம்பவத்தன்று திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் அருகே அப்துல் ஹக்கீம் தனது நண்பர் அசோகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற 2 பேர் திடீரென்று மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அப்துல் ஹக்கீமிடம் இருந்து ரூ.200, 1 செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளனர்.
அதற்குள் அப்துல் ஹக்கீம் சத்தம் போட அருகில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து பணம், செல்போன் பறித்த 2 பேரை பிடித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(23), உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன்(25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் பணம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மணிகண்டன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.