கர்நாடக முழு அடைப்பு போராட்டம் வாபஸ்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து இருந்த கர்நாடக முழு அடைப்பு போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
பெங்களூரு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகத்தில் 12-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மே 3-ந் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் வருகிற 12-ந் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று தெரிவித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகத்தில் வருகிற 12-ந் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று நாங்கள் அறிவித்தோம். இன்று (அதாவது நேற்று) சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற காவிரி விசாரணையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதையும் கூறவில்லை.
எனவே, கர்நாடகத்தில் வருகிற 12-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் மே மாதம் 3-ந் தேதி நடைபெறும் விசாரணையை பொறுத்து முழு அடைப்பு குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்திற்கு எதிராக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பேசி வருகிறார்கள். அதனால் அவர்களின் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர்களின் படங்களை கர்நாடகத்தில் திரையிட தடை விதித்து இருக்கிறோம்.” இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.