பெருந்துறை அருகே லாரி–வேன் பயங்கர மோதல்; 2 டிரைவர்கள் உடல் நசுங்கி சாவு 10 பேர் படுகாயம்
பெருந்துறை அருகே லாரி மற்றும் வேன் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகரை சேர்ந்த தருமன் (வயது 30), சகுந்தலா (48), ராம்குமார் (19), ஆதிரா (27), தியா (5), ரேவதி (22), பிரிசில்லா (35) ஆகிய 7 பேர் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு வேனில் சுற்றுலா சென்றனர். வேனின் டிரைவர்களாக ஈரோட்டை சேர்ந்த பொன்னுசாமியும் (30), சிலேட்டர் நகரை சேர்ந்த சிவாவும் (30) இருந்தனர்.
சுற்றுலா முடிந்ததும் அவர்கள் பாலக்காட்டில் இருந்து மீண்டும் பெருந்துறைக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை பொன்னுசாமி ஓட்டினார். அவருக்கு அருகில் இன்னொரு டிரைவரான சிவா இருந்தார். நேற்று காலை பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி– சீனாபுரம் ரோட்டில் துலுக்கபாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த லாரியும், வேனும் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதியும் சுக்குநூறாக நொறுங்கியதுடன், வேன் டிரைவர்களான பொன்னுசாமி, சிவா ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும், இந்த விபத்தில் வேனில் வந்த 7 பேர், லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த உதயசூரியன் (56) மற்றும் அவருடன் வந்த ஜெகநாதன் (45), பன்னீர் செல்வம் (54) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உதயசூரியன், ஜெகநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்–இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பொன்னுசாமி, சிவா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தினால் துடுப்பதி–சீனாபுரம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.