பெரம்பலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்குகிறது
பெரம்பலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி இளைஞர்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை, மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள இதுவரை சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு அனுமதி சீட்டு ஆன்லைனிலேயே வழங்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்க வரும் நபர்கள் கட்டாயம் அந்த அனுமதி சீட்டை கொண்டு வரவேண்டும். பின்னர் அவர்களுக்கான உடற் தகுதித்தேர்வு, எழுத்துத்தேர்வு உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்காக மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவருக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகள், மைதானத்தில் முகாமில் பங்கேற்கும் இளைஞர்களை அமர வைக்க அமைக்கப்பட்டுள்ள பந்தல், உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக இணையதள வசதியுடன் கூடிய கணினி அமைக்கப்படவுள்ள இடம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
ஆள்சேர்ப்பு பணிகளுக்காக வருகை தரவுள்ள ராணுவ அலுவலர்கள் தங்கும் இடம், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், உடற்தகுதித்தேர்வு, மருத்துவ தேர்வு நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆலோசித்த மாவட்ட கலெக்டர், முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நல்ல முறையில் செய்து தரவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மைதானத்தை சுற்றியுள்ள தடுப்புகள் மற்றும் மைதானத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் ஆகியவற்றின் உறுதித்தன்மையை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆங்காங்கே குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், போதிய அளவிலான தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படவேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்திய திருநாட்டினை காக்கும் பணியில் ஈடுபடும் பெரும் வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்கித்தர நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும் நம் தாய் திருநாட்டிற்கு ஆற்றுகின்ற கடமையாக கருதி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அலுவலர்களை மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது, கர்ணல் ரஜனீலால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் வினோத், பொதுப்பணித்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.