ஊட்டி கீழ்கோடப்பமந்து பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், கலெக்டரிடம் மனு
ஊட்டி கீழ்கோடப்பமந்து பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதன்படி, ஊட்டி நகராட்சி கீழ்கோடப்பமந்து பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி நகராட்சி 6-வது வார்டு கீழ்கோடப்பமந்து பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள், அங்குள்ள நகராட்சி சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். 500 மீட்டர் தூரமுள்ள அந்த சாலை கடந்த 2 ஆண்டாக பழுதடைந்து காணப்படுகிறது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையோரத்தில் குழிகள் தோண்டப்பட்டதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள ராஜகணபதி சுவாமியின் தேரோட்டம் நடைபெற உள்ளது. அப்போது பழுதடைந்த சாலை வழியாக தேர் வர முடியாத நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி அருகே தட்டனேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஊட்டி-மசினகுடி நெடுஞ்சாலை ஏக்குணி பிரிவில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் தட்டனேரி கிராமம் உள்ளது. இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து மோசமாக காணப் படுகிறது. இதனால் கிராமத்துக்குள் அரசு பஸ், பள்ளி வாகனம் போன்றவை வருவது இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் 1½ கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கூடலூர் அருகே உள்ள கோத்தர்வயல் கிராமத்தை சேர்ந்த பனியர் இன ஆதிவாசி மக்கள் கொடுத்த மனுவில், கோத்தர்வயலில் குடியிருக்க வீடுகள் இல்லாததால், ஒரு வீட்டில் 2 அல்லது 3 குடும்பத்தினர் வசிக்கிறோம். மேலும் இங்குள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச தொகுப்பு வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி மிஷினரி ஹில் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல் கல் பங்களா வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், அவற் றில் இதுவரை மின் விளக்குகள் பொருத்தப்பட வில்லை. இதனால் அந்த பகுதி இருள்சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வரும் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 150 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட வழங்கல் அதிகாரி தனலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.