வானூர் அருகே சவுக்கு தோப்பில் வாலிபர் வெட்டிக்கொலை
வானூர் அருகே சவுக்கு தோப்பில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்ச பள்ளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சவுக்கு தோப்பு உள்ளது. இங்கு நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சவுக்கு தோப்பு உரிமையாளர், இதுபற்றி வானூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். உடலில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.
இதையடுத்து வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். இதில், கொலை செய்யப்பட்ட வாலிபர் மொரட்டாண்டியை சேர்ந்த ஏழுமலை மகன் சந்தோஷ்குமார் (வயது 27) என்பதும் புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் அவர் வீட்டில் இருந்தார். மதியம் 2 மணியளவில் அவரது நண்பர்கள் மொரட்டாண்டி டோல்கேட் பகுதிக்கு வருமாறு செல்போனில் அழைத்தனர்.
இதையடுத்து சந்தோஷ் குமார் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து 4 நண்பர்களுடன் 2 மோட்டார் சைக்கிளில் புளிச்சபள்ளம் சவுக்கு தோப்பு பகுதிக்கு சென்றதும், அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தோஷ்குமாரை அழைத்துச்சென்ற நண்பர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சவுக்கு தோப்பில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.