ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
கோவை,
கோவை வடவள்ளி, சிறுவாணி ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் காலனியை சேர்ந்தவர் புண்ணியகோடி மகன் அருண் என்ற அருண் ரீகன் (வயது 25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, செம்மரக்கட்டை கடத்தல் உள்பட 23 வழக்குகள் உள்ளன. இவர் பல முறை சிறைக்கு சென்றுள்ளார்.
ஆர்.எஸ்.புரம், வடவள்ளி போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி ஆர்.எஸ்.புரத்தில் மருந்து கடை நடத்தி வரும் தன்ராஜ் என்பவரை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அருணையும், அவருடைய கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் நாராயணன் என்பவரை பாட்டிலால் குத்தியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அருணை கடந்த மாதம் 18-ந்தேதி போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் அருணை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருணிடம் வழங்கப்பட்டது.