நியூட்ரினோ ஆய்வு மையத்தை மக்கள் சக்தியால் மட்டுமே தடுக்க முடியும், வைகோ பேச்சு
கோர்ட்டுகள் மீது நம்பிக்கை இல்லை என்றும், நியூட்ரினோ ஆய்வு மையத்தை மக்கள் சக்தியால் மட்டுமே தடுக்க முடியும் என்றும் வைகோ பேசினார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 9-வது நாளான நேற்று அவர், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் நடைபயணத்தை தொடங்கினார்.
அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊர்களுக்கு கொளுத்தும் வெயிலில் நடந்து சென்றார். வழி நெடுகிலும் கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தோட்டங்களில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த பெண்கள், வைகோவுக்கு திராட்சை பழங்களை கொடுத்து வரவேற்றனர். நடைபயணத்தின் போது வைகோ பேசியதாவது:-
நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படுத்தப்பட்டால், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 12 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுப்பார்கள். ஏற்கனவே இருபோக நெல் விவசாயம் நடந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், தற்போது ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு தண்ணீர் எடுத்தால் விளைநிலங்கள் காய்ந்து போகும். பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். ஆராய்ச்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஆனால் ஆராய்ச்சி என்ற பெயரில் அழிவை தேடிக்கொள்ள மாட்டோம்.
நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த விடாமல் 3 ஆண்டுகளாக கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். இந்த திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார். இதனை தடுக்க மக்கள் சக்தியால் மட்டுமே முடியும். தமிழக அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தற்போது வரை அனுமதி கொடுக்கவில்லை.
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன். இதற்கு, அனுமதி கொடுத்து விடாதீர்கள். அனுமதி கொடுத்தால் கோர்ட்டுகளுக்கு சென்று வெற்றிபெற முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால், காவிரி பிரச்சினையில் நமக்கு கிடைத்த அநீதி தான் கிடைக்கும். நீதிமன்றங்களின் மீது எனக்கு இனி நம்பிக்கை இல்லை.
தமிழகத்தை அழிக்கும் நோக்கத்தில், பிரதமர் மோடி குறி வைத்து செயல்படுகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. அந்த கட்சிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதிய உணவுவேளையின் போது நாராயணத்தேவன்பட்டியில் நிருபர்களிடம் வைகோ கூறும்போது, தமிழகத்தை அனைத்து வகையிலும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க வேண்டும் என்று கேட்டால், மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக்கி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள். ஏனெனில், மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்துக்கு பச்சைக்கொடி காட்டி விட்டு தற்போது பிரதமர் நாடகம் ஆடுகிறார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, கடந்த 32 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போது இது, மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது என்றார்.