மதுரையில் தி.மு.க. அலுவலகம் மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
மதுரையில் 26-வது வட்ட தி.மு.க. அலுவலகம் மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் எதுவும் வெடிக்காததால் சேதம் ஏற்படவில்லை.
மதுரை,
மதுரை புதூர் மூன்றுமாவடி அருகே உள்ள பரசுராம்பட்டியை சேர்ந்தவர் செங்கிஸ்கான். முன்னாள் கவுன்சிலரான இவர், தற்போது 26-வது வட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் பரசுராம்பட்டி பகுதியில் தனது சொந்த இடத்தில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல்(வயது 42) என்பவர் நேற்று காலை கட்சி அலுவலகத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.
காலை 10.50 மணிக்கு அங்கு வந்த மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற நூல் சுற்றிய உருண்டையான ஒரு பொருளை தூக்கி வீசினார். அது உருண்டு கட்சி அலுவலகத்தை தாண்டிச் சென்று விட்டது. அதை பார்த்த சண்முகவேல் உடனே அங்கிருந்து வெளியே வர முயன்றார். அதற்குள் அந்த மர்மநபர் அதே போன்று மேலும் 2 பொருட்களை தூக்கி வீசி விட்டு, அங்கிருந்து ஓடினார்.
பின்பு வெளியே வந்த சண்முகவேல் அந்த பொருள் என்னவென்று பார்க்கும் போது, நாட்டு வெடிகுண்டு போன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நபரை விரட்டிச் சென்றார். ஆனால் மர்மநபர் அங்கு தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் மற்றொருவருடன் ஏறி தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து சண்முகவேல் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜுவுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வெடிக்காமல் அங்கு கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை மரத்தூள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் வாளிக்குள் வைத்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர். ஒவ்வொரு நாட்டு வெடிகுண்டும் 200 கிராம் எடை கொண் இருந்தது.
போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்தபோது செங்கிஸ்கான் வெளியூருக்கு சென்று விட்டார். வெடிகுண்டு வீசிய நபர் புளு கலர் சட்டையும், வெள்ளை நிற தொப்பியும் அணிந்திருந்தார் என்று நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் போலீசார் மர்மநபர்களின் அடையாளங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கிஸ்கான் தன் இளமைக் காலம் முதல் தி.மு.க.வில் இருந்து வருகிறார். பரசுராம்பட்டி முழுவதும் ஒரு காலத்தில் செங்கிஸ்கானின் தாத்தாவுடையது என்று அந்த மக்கள் தெரிவித்தனர்.
பெரிய நிலக்கிழாரான அவருக்கு முன்விரோதம் எதுவும் உள்ளதா அல்லது கட்சியில் எதுவும் பிரச்சினை இருக்கிறதா என்ற கோணத்தில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க. அலுவலகம் முன்பு வீசப்பட்ட 3 நாட்டு வெடிகுண்டுகளும் வெடிக்காததால் அங்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.