ஆர்.கே.பேட்டையில் சாலை வளைவில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி
ஆர்.கே.பேட்டையில் சாலை வளைவில் ராட்சத இரும்பு குழாய்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால் 5½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையில் திருத்தணி, பள்ளிப்பட்டு, சோளிங்கர் ஆகிய 3 சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக அதிக பாரம் ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகளும் இந்த வழியாகத்தான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து ராட்சத இரும்பு குழாய்களை ஏற்றி வந்த மிக நீளமான கன்டெய்னர் லாரி, நேற்று அதிகாலை அந்த வழியாக சோளிங்கர் நோக்கி சென்றது.
ஆனால் சோளிங்கரில் உள்ள ஒரு சாலை வளைவை கடக்க முடியாமல் கன்டெய்னர் லாரியை அதன் டிரைவர் சாமர்த்தியமாக பின்னால் எடுத்து, மீண்டும் ஆர்.கே.பேட்டை நோக்கி திரும்பி வந்தார். அதிகாலை 2 மணியளவில் ஆர்.கே.பேட்டையில் உள்ள இந்த 3 வழி சாலை சந்திப்பு பகுதியில் சோளிங்கரில் இருந்து திருத்தணி சாலைக்கு திரும்ப முயன்றார்.
அப்போது லாரியில் இருந்த சில ராட்சத இரும்பு குழாய்கள் சற்று சரிந்ததில், டீசல் டேங்கரில் இருந்து என்ஜினுக்கு செல்லும் குழாய்கள் உடைந்து போனது. இதனால் கன்டெய்னர் லாரி பழுதாகி, 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் சாலை வளைவை கடக்க முடியாமல் நடுவழியில் நின்று விட்டது.
இதனால் நேற்று காலையில் பள்ளிப்பட்டு, திருத்தணி, சோளிங்கர் சாலைகளில் வந்த பஸ், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் அந்த இடத்தை கடக்க முடியாமல் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதனால் சென்னை, திருவள்ளூர் போன்ற நகரங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொருட்கள் வாங்க செல்லும் வியாபாரிகள் அனைவரும் அவதிக்கு உள்ளானார்கள்.
அப்போது சோளிங்கரில் இருந்து வந்த ஒரு லாரி நிலை தடுமாறி சாலை ஓரமிருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் அந்த மின் கம்பம் வளைந்து போனது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் உள்ளூரைச் சேர்ந்த மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் பழுதாகி நின்று போன கன்டெய்னர் லாரியை பழுது பார்த்தனர்.
இதற்கிடையில் போலீசார் 3 சாலைகளில் நின்று போன வாகனங்களை மாற்று வழிகளில் திருப்பி விட்டனர். மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து போன மின்கம்பத்தை உடனடியாக சரிசெய்தனர்.
காலை 7.30 மணியளவில் கன்டெய்னர் லாரி பழுது பார்க்கப்பட்டு, சாலை வளைவை கடந்து புறப்பட்டு சென்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் 5½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு 3 சாலைகளிலும் போக்குவரத்து சீரானது.