என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தவித்த 9 தமிழ் மீனவர்கள் மீட்பு
என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தவித்த 9 தமிழ் மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
மும்பை,
கொங்கன் கர்வார் பகுதியில் இருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் என்ஜின் பழுதாகி ஜெய் விட்டல் என்ற மீன்பிடி படகு ஒன்று தத்தளித்து கொண்டிருந்தது. அதில் 9 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் கடற்படையின் உதவியை நாடினார்கள். அவர்கள் தமிழில் கடற்படையை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தமிழ் மீனவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த தகவல் கிடைத்ததும் ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல் அங்கு விரைந்தது. கடற்படையினர் நடுக்கடலில் படகில் தவித்து கொண்டிருந்த மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் படகுடன் கர்வார் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் கோவா பகுதியை சேர்ந்த தமிழ் மீனவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.