நாகர்கோவிலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் தலைமை தாங்கினார். செயலாளர் அமலன், இணைச்செயலாளர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் சிதம்பரதாணு என்ற முருகன், துணைச்செயலாளர்கள் சேகர், ஆர்.எஸ்.ராஜன், பூமணி, நகர செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகளை நியமனம் செய்த ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிப்பது, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 30 உறுப்பினர்களை கொண்ட பூத் கமிட்டிகள் அமைப்பது, அனைத்து பகுதிகளிலும் தெருமுனைக்கூட்டம் நடத்துவது, ரஜினியை முதல்–அமைச்சராக்க பாடுபடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, வடசேரி அண்ணா சிலை, எம்.ஜி.ஆர். சிலை, மார்ஷல் நேசமணி சிலை, அம்பேத்கர் சிலை, வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை ஆகியவற்றுக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.