தைலமரக்காட்டில் திடீர் தீ தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

அன்னவாசல் அருகே அரசுக்கு சொந்தமான தைலமரக்காடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

Update: 2018-04-08 22:45 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை- பரம்பூர் சாலையில் அரசுக்கு சொந்தமான அண்ணாபண்ணை உள்ளது. இதை ஒட்டிய பகுதி முழுவதும் தைலமரக்காடுகள் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென தைலமரக்காட்டில் தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகே இருந்த தைலமரங்களில் தீ பற்றி எரிந்தது.

போராடி அணைத்தனர்

இதைக்கண்ட அந்த வழியாக சென்ற ஒருவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் இதுகுறித்து உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், வனத்துறையினர் உதவியுடன் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து அன்னவாசல் போலீசார் மர்மநபர்கள் யாரேனும் தைலமரக்காட்டிற்கு தீ வைத்தார்களா? அல்லது மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தைலமரக்காடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்