போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 தேர்வை எழுதியுள்ள மாணவ-மாணவிகளில் 96 பேருக்கு தொடுவானம் போட்டி தேர்வுக்காக விலையில்லா மடிக்கணினி மற்றும் கையேடுகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்றார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 96 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் கையேடுகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் 412 ஒன்றியங்களில் தொடுவானம் என்ற பெயரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 8 மையங்கள் அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையங்களில் மொத்தம் 2,361 பேர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 134 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஸ்பீடு பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இணையம் வழியே சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மண்டல அளவில் பயிற்சி
இதேபோன்று மண்டல அளவிலான உண்டு உறைவிட விரைவு பயிற்சிக்காக தர்மபுரி மாவட்டத்திலிருந்து தமிழ்வழியில் பயிலும் 37 மாணவ- மாணவிகள் கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் பயிற்சியிலும், ஆங்கில வழியில் பயிலும் 9 மாணவ, மாணவிகள் ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் பயிற்சியிலும் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர். இந்த பயிற்சி இன்று (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை மாணவ- மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முடி, கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள், கல்வித்துறை அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.