காட்டாங்கொளத்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
காட்டாங்கொளத்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே நின்னைக்காட்டூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டின் பின்புறம் முள்புதரில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சந்தேகம் அடைந்து துர்நாற்றம் வீசிய முள்புதர் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு ஆண், ஒரு பெண் இருவரும் மரத்தில் தனித்தனியாக தூக்கில் தொங்கியபடி பிணமாக காணப்பட்டனர். உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த இடத்தில் இறந்தவர்களின் ஆதார் கார்டுகள் உள்பட சில ஆதாரங்கள் இருந்தன. இதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து மறைமலைநகர் நகர் போலீசில் நின்னைக்காட்டூர் கிராம நிர்வாக அதிகாரி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
நின்னைக்காட்டூர் சுடுகாடு அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் உத்திரமேரூர் மணல்மேடு கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (வயது 30) மற்றும் நிஷா (25) என்பது தெரியவந்தது. விநாயகமூர்த்திக்கு திருமணமாகி மனைவி உள்ளார் என்பதும், நிஷாவுக்கு திருமணமாகி கணவர் உள்ளார் என்பதும் தெரியவந்தது. விநாயகமூர்த்திக்கும், நிஷாவிற்கும் தொடர்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் அவர்களது கள்ளக்காதல் அவர்களது வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்கள், ஊர்க்காரர்களுக்கும் தெரிந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.