மாதவரத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
மாதவரத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 25 பவுன் நகைகள் மற்றும் வைர கம்மல் திருட்டுபோனது.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை கணபதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் குமார் என்ற பிரபுகுமார்(வயது 42). இவர், மாதவரம் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வீட்டை பூட்டி குடும்பத்துடன், கோவைக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ஒரு வைர கம்மல் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்து குமார் அளித்த புகாரின்பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.