மக்களை ஏமாற்றியது போதும்: மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை நிறுத்த வேண்டும், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
மக்களை ஏமாற்றியது போதும் என்றும், மு.க.ஸ்டாலின் தனது நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி என்பது நீண்டநாள் பிரச்சினை. கிட்டத்தட்ட 100 ஆண்டு பிரச்சினை. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்பு உள்ள பிரச்சினைகளை பேசித்தான் தீர்க்க முடியும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு காவிரி நீரை தர தேவையில்லை என கூறியுள்ளார். இதனை திருநாவுக்கரசர் கண்டித்திருக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தப்படும். காவிரி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின், தனது நடைபயணத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை என 50 வருடங்களாக மக்களை ஏமாற்றியது போதும். துணைவேந்தர் நியமனம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது தி.மு.க. அதுகுறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல. முதலில் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசிய பின்னர் பிரதமரை சந்திக்கலாம் என்பதை மாற்றிக் கூறுவது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.