மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று ஓமலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ்நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, முன்னாள் எம்.பி. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் மாதேஷ்வரன் வரவேற்றார். இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் மட்டுமன்றி மேற்கு மண்டலமே எப்போதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா நினைத்திருந்தால் அவரே அல்லது துணை பொதுச்செயலாளரான என்னையோ முதல்-அமைச்சராக்கி இருக்கலாம். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என கூறிய நேரத்தில் அவர் பொதுச்செயலாளரானார். ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினார். ஆனால் அவர் ஏறி வந்த ஏணியினை எட்டி உதைத்து துரோகம் செய்தார்.
18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்ட வழங்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது. அதன்பிறகு பதவி இல்லாமல்தான் இங்கு வருவார். ஏற்றிவிட்ட ஏணியினை எட்டி உதைப்பவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்கள். காவிரி பிரச்சினை, நியூட்ரினோ பிரச்சினை என அனைத்திலும் வாய் முடி மவுனமாக உள்ளனர். இந்த ஆட்சி தொடராது.
இரட்டை இலை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கையில் இருந்தபோது வெற்றிச்சின்னம். ஆனால் துரோகிகளின் கையில் இருக்கும் போது அது வெற்றிச்சின்னம் இல்லை என்பதை ஆர்.கே.நகர் தேர்தலே உதாரணம். குக்கர் சின்னம் பெற்று ஆளும் கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றோம். எங்கள் மீது உள்ள பயத்தால் தற்போது அம்மா மக்கள் மன்னெற்ற கழகம் கொடியினை காட்டி கோர்ட்டிற்கு போகின்றனர்.
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் போராடுகிறார்கள். போராட்டத்திற்கு துணை நிற்போம். அவர்களுடன் இணைந்து போராடுவோம். விமான நிலையம் விரிவாக்கம் மட்டுமன்றி மக்கள் ஏற்று கொள்ளாத எந்த திட்டமானாலும் அதனை அனுமதிக்கமாட்டோம். அடுத்த மாதம் சேலம் மாவட்டத்தில் தொகுதி வாரியாக, கிராமம் கிராமமாக மக்களை சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். மக்களை நேரில் சந்தித்து அரசின் துரோகத்தை எடுத்து கூறுவேன் என அவர் கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கருப்பூர் மணி, அன்பழகன், ரங்கநாதன், தங்கவேல், ராஜேந்திரன், வக்கீல் பிரிவுவை சேர்ந்த நடராஜன், மாணிக்கசுந்தர், செந்தில்குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் முனுசாமி, கோபாலகிருஷ்ணன், ராஜகுரு, செல்வம், சிவஇளங்கோ, கருப்பூர் நகர செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சண்முகம், மேச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் உள்பட பலர் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். முன்னதாக காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை தடுக்கக்கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் குப்பூர் அருகே தினகரன் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.