கடந்த நிதி ஆண்டில் பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.30½ கோடி தங்கம் பறிமுதல்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் வழியாகவும் அடிக்கடி தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

Update: 2018-04-07 23:41 GMT
பெங்களூரு,

கடந்த நிதி ஆண்டான (2017-2018) பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் தங்கம் பற்றிய விவரம் வருமாறு:-

2017-18-ம் நிதி ஆண்டில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக இலங்கை, ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.30½ கோடியாகும்.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு முறைகளை பயன்படுத்தி தங்கம் கடத்தி வந்துள்ளனர். பழச்சாறு பிழியும் கருவிகள், அழகு சாதன பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு குழாய்கள் உள்பட பல்வேறு பொருட்களில் தங்கத்தை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தல்காரர்கள் கைவரிசை காட்டி சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்