10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் டியூசன் உரிமையாளர் கைது

10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் டியூசன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-07 23:16 GMT
மும்பை,

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வந்தது. அண்மையில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு தொடங்கும் முன்பே சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் அம்போலி போலீசார் டியூசன் நடத்தி வந்த முனீர் என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்