கூட்டுறவு வங்கி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தலைஞாயிறு அருகே கூட்டுறவு வங்கி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-07 22:45 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கான மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு பிரிவினருக்கு சாதகமாக நடந்து கொள்வதாக கூறியும், நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சவுந்தரராசன், தி.மு.க.வை சேர்ந்த வெங்கடேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லெனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிளை செயலாளர் ஞானபிரகாசம், பா.ஜ.க.வை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

கூட்டுறவு வங்கி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்றும், ஒரு பிரிவினருக்கு சாதகமாக செயல்படக்கூடாது என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தமிழ்வாணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் அன்னதாசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காதர்மீரான், மாவட்ட பிரதிநிதி பிரபு உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்