ரூ.50 லட்சம் அலங்கார கண்ணாடிகள் நொறுங்கியது
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து ரூ.50 லட்சம் அலங்கார கண்ணாடிகள் நொறுங்கியது.
திருவொற்றியூர்,
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. 40 அடி நீளம் கொண்ட அந்த லாரியில், 20 அடி நீளம் கொண்ட 2 கன்டெய்னர் பெட்டிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான அலங்கார கண்ணாடிகள் இருந்தன. காசிமேடு, மீன்பிடி துறைமுகம் அருகே வந்தபோது, அங்கு கச்சா எண்ணெய் குழாய் பதிக்க சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் சாலையோரம் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் சிக்கி, கன்டெய்னர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் 2 கன்டெய்னர் பெட்டிகளில் இருந்த அலங்கார கண்ணாடிகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை ராட்சத கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது.