விழுப்புரத்தில் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி விட்டு தேர்தல் அதிகாரி ஓட்டம்
விழுப்புரத்தில் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி விட்டு தேர்தல் அதிகாரி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் சாலைப்பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த வந்ததால் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி விட்டு தேர்தல் அதிகாரி சென்றுவிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் 11 நிர்வாகக்குழு இயக்குனர் பதவிகளுக்கான தேர்தலில் 21 பேர் மனுதாக்கல் செய்தனர். அவர்களில் 11 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. ஆனால் இதில் முறைப்படி இயக்குனர்கள் வாக்களித்து தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தாமலேயே தலைவர், துணைத்தலைவர் பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்க இயக்குனரான நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அலுவலகத்தை பூட்டிவிட்டு தேர்தல் அதிகாரி ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோவிந்தராஜ் கூறுகையில், பணம் பெற்றுக்கொண்டு தலைவர், துணைத்தலைவரை நியமனம் செய்துள்ளனர். இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இந்த சங்கத்தில் 486 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 20 பேர் மட்டுமே அலுவலக ஊழியர்கள். மற்ற அனைவரும் சாலைப்பணியாளர்கள். எனவே முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றார்.