சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பேர் சாவு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் மேலும் 2 தொழிலாளிகள் பலியானார்கள்.
தாயில்பட்டி,
விருதுநகர் அருகே கடந்த 30-ந் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். இந்த சோகம் மறையும் முன்பு கடந்த 5-ந் தேதி சத்திரம் கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஒரு தொழிலாளி உயிர் இழந்தார்.
நேற்று முன்தினம் சிவகாசி அருகே 2 இடங்களில் வெடி விபத்து ஏற்பட்டது. ராமுத்தேவன்பட்டியில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் இறந்துபோனார்கள். 2 தொழிலாளர்கள் சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எதிர்கோட்டை காக்கிவாடன்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி உள்பட இருவர் உயிர் இழந்தார்கள். 4 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி குருநாதன் என்பவருடைய மனைவியான முத்துமாரி நேற்று காலை இறந்து போனார்.
மாலையில் கணபதி என்பவர் பலியானார். இதனால் இந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இறந்த முத்துமாரிக்கு 2 மகனும் 2 மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ராமுத்தேவன்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் அந்த ஆலையில் கணக்காளராக இருந்த செந்தில்வேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.