‘சிவசேனாவுடன் கூட்டணி தொடர்வதையே பா.ஜனதா விரும்புகிறது’ அமித் ஷா பேட்டி

மும்பையில் நடைபெற்ற பா.ஜனதாவின் நிறுவன நாள் மாநாட்டில் அதன் தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

Update: 2018-04-06 23:32 GMT
மும்பை,

செய்தியாளர் சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்குமா? என அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது:-

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பது உறுதி. ஆனாலும் நாங்கள் கூட்டணி கட்சிகளையும் எங்களுடன் அரவணைத்துதான் செல்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதாக கூறப்படுவது தவறானது. 2014-ம் ஆண்டு முதல் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்துள்ளது. மராட்டியத்தில் சிவசேனா எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரவே பா.ஜனதா விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்