கர்நாடகத்தில் யாரும் எதிர்பாராத, ஆச்சரியம் அளிக்கும் தேர்தல் முடிவு வரும்
கர்நாடகத்தில் யாரும் எதிர்பாராத, ஆச்சரியம் அளிக்கும் தேர்தல் முடிவு வரும் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
பா.ஜனதா நிறுவன நாள் விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்தார். இதில் ஷோபா எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-
கர்நாடகத்தில் யாரும் எதிர்பாராத ஆச்சரியம் அளிக்கும் தேர்தல் முடிவுகள் வரும். இதற்காக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த திசையில் வியூகங்களை வகுத்துள்ளோம். 224 தொகுதிகளிலும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இன்னும் 2 மாதத்தில் சித்தராமையா முதல்-மந்திரி பதவியை இழப்பார். அவரை பற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை. தனது சொந்த தொகுதிகளான சாமுண்டீஸ்வரி, வருணா தொகுதிகளை விட்டு வேறு தொகுதிகளுக்கு செல்லும் நிலை சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ளது. டிக்கெட் கேட்பவர்களின் எண்ணிக்கை எங்கள் கட்சியில் அதிகமாக உள்ளது. அதனால் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. இது சகஜமானது தான்.
ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானால் அந்த கட்சியின் கருத்து வேறுபாடுகள் வீதிக்கு வரும். நாம் நமது கட்சியின் கடந்த கால நினைவுகளை நினைவில் கொள்ள வேண்டும். வாஜ்பாய், அத்வானி ஆகியோருடன் சேர்ந்து கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்த நாட்கள் எனது நினைவில் உள்ளது.
இன்று 22 மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இதில் 16 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு நல்ல செய்தி வெளியிடப்படும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.