கபிலர்மலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கபிலர்மலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் வட்டம் கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ்நகர் ஆதிதிராவிடர் காலனியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கபிலர்மலை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஆசிர்வாதம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார். கபிலர்மலை ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் இந்திரமூர்த்தி, இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முத்தமிழ் நகர் ஆதிதிராவிடர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் பரமத்தி ஒன்றிய செயலாளர் கிள்ளிவளவன், முகாம் செயலாளர் சிவகுமார் மற்றும் முத்தமிழ் நகர் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.