முறைகேடு செய்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முறைகேடு செய்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சியின் செயலாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜகம்பீரம். இவர், கடந்த 2016-17-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊராட்சியில் சொத்துவரி தொகையை வசூலித்ததாக கூறப்படுகிறது. பொதுவாக ஊராட்சிகளில் சொத்துவரியின் தொகை வசூலித்தால் அதில் இருந்து 10 சதவீத தொகையாக அரசுக்கு நூலக வரியாக செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அதிகாரிகள் வெங்கடசமுத்திரம் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது ஊராட்சி செயலாளர் ராஜகம்பீரம் ஊராட்சியில் வசூலிக்கப்பட்ட சொத்துவரியின் தொகையில் இருந்து நூலக வரி செலுத்தாதது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் அப்துல்கரீம், ஊராட்சி செயலாளர் ராஜகம்பீரத்திடம் விசாரணை நடத்தியதில் நூலக வரிதொகை 51 ஆயித்து 860 ரூபாய் செலுத்திவிட்டதாக மழுப்பலான பதிலை தெரிவித்தார். உடனடியாக தணிக்கை செய்த அதிகாரிகள் நூலக வரி செலுத்தியதற்கான செலானை ஒன்றிய ஆணையாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டனர். அப்போது விசாரணையில் ஊராட்சி செயலாளர் ராஜகம்பீரம் முறைகேடு செய்து இருப்பது தெரியவந்தது.
இதனையெடுத்து பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் அப்துல்கரீம், ஊராட்சி செயலாளர் ராஜகம்பீரம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ராமன், ராஜகம்பீரத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.