மாட்டுவண்டி தொழிலாளி கொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் தீர்த்து கட்டினேன் என்று மாட்டு வண்டி தொழிலாளியை கொலை செய்த அவரது தம்பி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி,
வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் குமார்(வயது 45), மாட்டுவண்டி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சவுக்கு தோப்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குமாரை அவரது தம்பி ராஜேந்திரன் (35) கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அவர் கூடப்பாக்கம் பகுதியில் தனது தங்கை சரோஜாவின் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜேந்திரனை கைது செய்தனர். அப்போது சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த புகழரசன் (18), அவரது உறவினரான ஒரு சிறுவனும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ராஜேந்திரன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நான் ஒரு கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் அவளை சம்மட்டியால் அடித்து கொலை செய்தேன். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் இருந்த நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தேன். அதன் பின்னர் மணல் அள்ளும் வேலையில் ஈடுபட்டு வந்தேன். நான் மாட்டுவண்டி வாங்குவதற்கு எனது அண்ணன் குமார் பணம் கொடுத்தார்.
கடந்த வாரம் ஒரு பெண்ணிடம் நான் தவறாக நடக்க முயற்சி செய்த போது குமார் என்னை அசிங்கமாக திட்டினார். இதனால் அவருக்கும் எனக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரது மாடுகளை கத்தியால் வெட்டி காயப்படுத்தினேன். மேலும் குமாரை தீர்த்து கட்ட திட்டமிட்டேன். எனவே அவரை கோனேரிக்குப்பம் ஆற்றங்கரைக்கு சமரசம் பேச வரும்படி எங்கள் உறவினரான புகழரசன் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தேன். அவரும் அங்கு வந்தார்.
அப்போது அவர் எனக்கு கொடுத்த பணத்தை உடனடியாக திருப்பி தரும்படி கேட்டு தகராறு செய்தார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் என்னை அடிக்க வந்தார்.
அப்போது நானும், என்னுடன் இருந்த 2 பேரும் சேர்ந்து அவரை தாக்கினோம். அப்போது நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரின் கழுத்தில் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நாங்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றோம். போலீசார் எங்களை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராஜேந்திரன், புகழரசன் ஆகிய 2 பேரையும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அந்த சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் நேற்று கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.