ராமேசுவரம் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தீர்த்த கிணறு புத்துயிர் பெறுகிறது
ராமேசுவரம் கோவிலில் தீர்த்தம் வழங்க 40 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கிணறு புத்துயிர் பெறுகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். இதில் 1-வது தீர்த்தமான மகாலட்சுமி முதல் சக்கர தீர்த்தமான 6-வது தீர்த்தம் வரை கோவிலுக்குள் குறுகிய பாதையில் அமைந்துள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை நாட்கள் மற்றும் அமாவாசை நாட்களில் இந்த 6 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படாமல் திருக் கோவில் நிர்வாகத்தால் அவ்வப்போது மூடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் பக்தர்கள் நீராடி செல்லும் வகையில் அதற்கான வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டது.அதை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள 1 முதல் 6 வரையிலான 6 தீர்த்த கிணறுகளை மட்டும் கோவிலின் 2-ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் இடம் மாற்றம் செய்ய இந்து சமயஅற நிலையத் துறை முடிவு செய்தது.
அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.இதில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தீர்த்த கிணறை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-
ஐகோர்ட்டு உத்தரவுபடி 6 தீர்த்த கிணறுகளை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவிலின் 2-ம் பிரகாரத்தில் வடக்கு பகுதியில் பயன்பாட்டில் இருந்த கிணறு சில காரணங்களால் 40 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுள்ளது.
மூடப்பட்ட அதே தீர்த்த கிணற்றை மீண்டும் தோண்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மகாலட்சுமி என பெயரிட்டு முதல் தீர்த்தமாக கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர 5 தீர்த்த கிணறுகள் புதிதாக தோண்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரை 2 தீர்த்த கிணறுகள் தோண்டும் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. கோவிலின் வடக்கு பகுதியில் இன்னும் 3 தீர்த்த கிணறுகளும் தோண்டப்படஉள்ளன.
6 தீர்த்த கிணறுகள் பணிகள் முழுமையாக முடிந்து சிறப்பு யாக பூஜைகள் செய்து பக்தர்கள் புனித நீராட பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். கோவிலின் வடக்கு ரத வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டு அந்த பகுதியில் தீர்த்த கவுண்ட்டர்களும் அமைக்கப்படஉள்ளன. தீர்த்தமாட வரும் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக வந்து மீண்டும் அதே வாசல் வழியாக செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.