பேரையூர் அருகே சந்தையூரில் பிரச்சினைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது: 2 பேர் தீக்குளிக்க முயற்சி, 67 பேர் கைது
மதுரை மாவட்டம் சந்தையூரில் பிரச்சினைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது. சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த 67 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்.
பேரையூர்,
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ளது, சந்தையூர். இந்த ஊரில் உள்ள இந்திரா காலனியில் எழுப்பப்பட்ட சுவர் காரணமாக இரு சமூகத்தினர் இடையே கடந்த பல நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்தநிலையில், இந்த சுவரை இடிக்கக் கோரி, ஒரு சமூகத்தினர் சந்தையூர் அருகில் உள்ள மலைப்பகுதியில் குடியேறி போராட்டம் நடத்தி வந்தனர். மற்றொரு சமூகத்தினர் சுவரை இடிக்கக்கூடாது என்று எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் பழனிமுருகன் என்பவர் திடீரென்று உடல்நலக்குறைவினால் இறந்தார். அவரது உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பழனிமுருகன் இறப்பிற்கு உரிய நிவாரணம், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்து, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பழனிமுருகனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து அந்த சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்ததால் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் இரு சமூக பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் பிரச்சினைக்குரிய சுவரில் சர்ச்சைக்குரிய 2 மீட்டர் அளவில் உள்ள சுவர் பகுதியை இடிப்பது என்றும், அங்குள்ள அங்கன்வாடியை புதுப்பித்து இருசமூகத்தினர் குழந்தைகள் படிக்க வழிசெய்வது என்றும் முடிவெடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நேற்று பிரச்சினைக்குரிய சுவரின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடிக்க முயன்றனர். அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 2 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் சுவரை இடிக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரை போலீசார் கைது செய்து பேரையூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பரமசிவம், ராமகிருஷ்ணன், தாசில்தார்கள் உதயச்சந்திரன், ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார் முன்னிலையில் பிரச்சினைக்குரிய சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. மேலும் மலையில் ஏறி போராட்டம் நடத்திய அனைவரும் ஊருக்குள் வரவழைக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
தொடர்ந்து, பழனிமுருகனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு அங்குள்ள அருந்ததியர் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. கடந்த சில மாதங்களாக சந்தையூரில் இரு சமூகத்தினரிடையே நடைபெற்ற பிரச்சினை நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
இருப்பினும் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.