குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் வடமதுரை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வடமதுரை,
வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 70 வீடுகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பாக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 3 சிறிய குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டது. கடந்த 1 மாதமாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படு கிறது. இதன்காரணமாக தண்ணீரை தேடி அப்பகுதி மக்கள் அலைவதை பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.