காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட முயற்சி, 67 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தேனி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தேனி என்.ஆர்.டி.நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சார்பில், பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர்.
தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் அலுவலகத்துக்குள் செல்லும் நுழைவு பகுதியில் இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்து இருந்தனர்.
இதையடுத்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கவுர்மோகன்தாஸ் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் நல்லுச்சாமி மற்றும் அக்கட்சியினர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்களில் சிலர் கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு வந்தனர். வருமான வரித்துறை அலுவலகம் அருகில் வந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரை போலீசார் கைது செய்து, தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.