பெங்களூருவில் தேர்தல் தொடர்பான புகைப்பட கண்காட்சி
பெங்களூருவில் தேர்தல் தொடர்பான புகைப்பட கண்காட்சியை தலைமை தேர்தல் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவத் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி சார்பில் தேர்தல் தொடர்பான புகைப்பட கண்காட்சி பெங்களூரு சித்ரகலா பரிஷத் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கலந்து கொண்டு, புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் தேர்தல், வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது, வாக்குகளை எண்ணுவது, வாக்குச்சாவடிகள், வாக்குச்சீட்டில் ஓட்டு அளிப்பது, வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், தேர்தலில் பெண்களின் பங்கேற்பு, முதியவர்கள் வாக்களிப்பது, பெயர்களை பட்டியலில் சேர்ப்பது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள், தேசிய வாக்காளர் தின விழா, தலைமை தேர்தல் கமிஷனர் ஆய்வு கூட்டம் நடத்தியது போன்றவை தொடர்பான 150 புகைப்படங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய செயலி, கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள், தேர்தல் கேள்விகள் என 3 தனித்தனியாக செல்போன் செயலிகளை அறிமுகம் செய்தார். தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுக்காக 8 வாகனங்களின் சேவையை தலைமை தேர்தல் கமிஷனர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 8 வாகனங்களும் நகரில் உள்ள 8 மண்டலங்களில் வலம் வந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடும். தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஒரு செயல் திட்டமும் இதில் வெளியிடப்பட்டது. நகரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விளம்பர பலகைகளில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் இந்திய தேர்தல் கமிஷனர்கள் சுனில் அரோரா, அசோக் லவஷா, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.