சத்தியமங்கலம் அரசூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி சாவு
திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த அக்காள்-தம்பி பவானி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள்.
சத்தியமங்கலம்,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). சலவைத் தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (35). இவர்களுடைய மகள் பிருந்தா (15). மகன் தர்ஷன் (9).
இந்த நிலையில் செல்வராஜின் நண்பரான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் தேவாங்கபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு நேற்று காலை திருமணம் நடந்தது.
இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள செல்வராஜ் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் நேற்று முன்தினம் அரசூருக்கு வந்திருந்தார். பின்னர் நேற்று திருமண விழாவில் அவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில் செல்வராஜ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று அரசூர் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றார். இதில் செல்வராஜ், சுமதி ஆகியோர் ஆற்றின் கரையில் இருந்து துணி துவைத்துக்கொண்டு இருந்தனர். பிருந்தா தன்னுடைய தம்பி தர்ஷனுடன் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். இருவருக்குமே நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கினார்கள். இதைப்பார்த்த செல்வராஜ், அவர்களை காப்பாற்ற முயன்றார். அக்கம் பக்கத்தில் குளித்துக்கொண்டு இருந்தவர்களும் அவர்களை காப்பாற்ற வந்தனர். ஆனாலும் ஆற்றில் மூழ்கி பிருந்தா, தர்ஷன் இருவரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் ஆற்றிலிருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது.
இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆற்றில் மூழ்கி இறந்த பிருந்தா மற்றும் தர்ஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த அக்காள், தம்பி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அரசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.