முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2018-04-05 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர் புதுத்தெரு, மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டுமரங்கள் என 4 ஆயிரம் நாட்டு படகுகளும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 301 விசைப்படகுகளும் உள்ளன. இதில் விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும் மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.

கடலுக்கு செல்லவில்லை

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்து கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தங்களது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை சேது பாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். 

மேலும் செய்திகள்