முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழக அரசு பஸ்கள் கர்நாடக எல்லையில் நிறுத்தம் பயணிகள் அவதி
முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஓசூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ரெயில் மறியல், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை போராட்டங்கள் நடந்தன. மேலும் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. பஸ்களும் அதிக அளவில் இயங்கவில்லை.
அதன்படி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஓசூரில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பஸ்கள் நிறுத்தம்
கர்நாடக மாநிலத்தில் இருந்து 160 கர்நாடக மாநில அரசு பஸ்கள் பெங்களூருவில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று தமிழகத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக கர்நாடக அரசு பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
அதே போல தமிழக அரசு பஸ்கள் தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடியுடன் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள் அங்கிருந்து அத்திப்பள்ளி வரை நடந்து சென்று பின்னர் அம்மாநில பஸ்சில் சென்றார்கள். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.
போலீசார் பாதுகாப்பு
ஓசூரில் ஒரு சில டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் ஓசூர் பஸ் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படாததால் நேற்று ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்க ஓசூர் ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதியில் தமிழக - கர்நாடக மாநில போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.