மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற இ-சேவை மையம் உள்ளிட்டவற்றில் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற இ-சேவை மையம் உள்ளிட்டவற்றில் விண்ணப்பிக்கலாம்

Update: 2018-04-05 22:15 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில், வசிக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் மையம், பொது சேவை மையம், அனைத்து இ-சேவை மையம், அனைத்து ஊராட்சி ஒன்றியம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங் களிலுள்ள இ-சேவை மையம், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கூட்டுறவு வங்கியிலுள்ள சேவை மையம், அரசு கேபிள் டி.வி. கழக சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களுடனும், சமீபத்திய பாஸ் போர்ட்சைஸ் போட்டோ-2, குடும்ப அட்டை நகல், ரத்த வகை பிரிவு, ஆதார் அட்டை பிரிவினராக இருப்பின் சாதி சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்