சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-04-05 22:00 GMT
புவனகிரி,

பா.ம.க. தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ம.க. உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் அசோக்குமார், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அய்யாசாமி, மாநில துணை தலைவர் சிட்டிபாபு, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் செல்வமகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க.தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும், விளை பொருட்களுக்கு உரிய தொகையை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மூட்டைகளை எடைபோடும் போது விதிகளுக்கு புறம்பாக பணம் கேட்பதை கண்டித்து கண்டன் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் பூதா.அருள்மொழி, சந்திரபாண்டியன், ஜெயசஞ்சீவி, தேவதாஸ் படையாண்டவர், முத்துகுமார், வீரமணி, சின்னமணி, கல்லீஸ் கற்பகம், பால்ஸ் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யப்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்