ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதாக புகார் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு பொன்னன்ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் வெட்டி அள்ளுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் தாசில்தார் அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்துள்ளது குளிச்சப்பட்டு கிராமம். இங்குள்ள பெரிய ஏரி என்று அழைக்கப்படும் பொன்னன்ஏரி 88 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் குளிச்சப்பட்டு கிராமத்தை சுற்றி உள்ள 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் போதும் இந்த ஏரியும் நிரம்பும்.
இதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, குடிநீருக்கு ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல்மண், சவுடுமண், களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் சொந்த உபயோகத்துக்கு இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது.
அதன்படி பொன்னன் ஏரியில் இருந்தும் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி மண் பொக்லின் எந்திரம் மூலம் அள்ளப்பட்டது. இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி தினமும் ஏராளமான லாரிகளில் மண் அள்ளி சென்றனர். 3 மீட்டர் ஆழத்துக்கு மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இதற்கு குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், தாசில்தார், கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதிகளில் பொக்லின் எந்திரம் மூலம் லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்ட போது, அவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏரியில் இருந்து அதிக அளவு மண் எடுக்கப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாய் மேம்பாட்டு திட்ட பணி நடைபெறும் போது இந்த ஏரி பகுதிகள் சமப்படுத்தப்படும். மேலும் இந்த பணியின் போது வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்த துறைக்கு தேவையான கடின மண் இந்த ஏரியில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தற்போது ஏரியில் இருந்து மண் வழங்க இயலாது என எழுத்து பூர்வமாகவும் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இது குறித்து தாசில்தாரிடம் மனு அளித்தனர். அதன் பின்னர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கும் சென்று மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “பொதுப்பணித்துறையினர் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அள்ளுவதால் ஏரிக்கு தண்ணீர் வரும் போது பாசனத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்ல முடியவில்லை. எனவே இனி மண் அள்ள அனுமதிக்க கூடாது. தொடர்ந்து மண் அள்ளிக்கொண்டு லாரிகள் செல்வதால் குளிச்சப்பட்டு- தளவாய் பாளையம் சாலை மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஏரியில் உள்ள 3 கண்மாய்களில் உள்ள பாலங்களும் சேதம் அடைந்துள்ளனர். இதனையும் சீர் செய்து தர வேண்டும்.